ரெயில், பேருந்து நிலையத்தில் குண்டு வெடிக்கும்; மிரட்டல் விடுத்த நபர் கைது


ரெயில், பேருந்து நிலையத்தில் குண்டு வெடிக்கும்; மிரட்டல் விடுத்த நபர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2020 10:49 PM GMT (Updated: 25 Oct 2020 10:49 PM GMT)

ரெயில் மற்றும் பேருந்து நிலையத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் ரெயில்வே நிலையம், பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை ஒன்றில் குண்டுகள் வெடிக்கும் என்று தொலைபேசி வழியே மர்ம நபர் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இந்த தொலைபேசி அழைப்பு புரளி என தெரிய வந்துள்ளது.  வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதுபற்றி கான்பூர் நகர போலீஸ் சூப்பிரெண்டு தீபக் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story