மராட்டிய மாநில துணை-முதல் மந்திரி அஜித்பாவருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டிய மாநில துணை-முதல் மந்திரி அஜித்பாவருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 26 Oct 2020 6:38 AM GMT (Updated: 26 Oct 2020 6:38 AM GMT)

மராட்டிய மாநில துணை-முதல் மந்திரி அஜித்பாவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் முதலில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வந்தது. தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது.  இருப்பினும் மாநிலத்தில் கொரோனா தொற்றால் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மராட்டிய மாநில துணை-முதல் மந்திரி அஜித்பாவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக துணை-முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டுள்ளார்.

முன்னதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story