நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: முன்னாள் மத்திய அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை
கடந்த 1999-ம் ஆண்டு அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தவர் திலீப் ராய்.
புதுடெல்லி,
கடந்த 1999-ம் ஆண்டு அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தவர் திலீப் ராய். இதில் அவர் பதவி வகித்த காலத்தின் போது ஜார்கண்ட் மாநிலத்தில் சிடிஎல் என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து தொடரப்பட்ட வழக்கை டெல்லியில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.இதற்கிடையே திலீப் ராய் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிருபணம் ஆகியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அவரை குற்றவாளி எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் திலீப் ராயிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி பாரத் பராஷர் தீர்ப்பளித்தார்.
திலீப் ராயை தவிர்த்து இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story