காஷ்மீரில் என்கவுண்ட்டர்: பயங்கரவாதி சுட்டு கொலை; மற்றொரு பயங்கரவாதி சரண்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதுடன், மற்றொரு பயங்கரவாதி சரண் அடைந்துள்ளார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபுரா பகுதியில் நூர்புரா என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதியை அதிரடியாக சுட்டு கொன்றனர். இதேபோன்று, மற்றொரு பயங்கரவாதி அவர்களிடம் சரண் அடைந்துள்ளார்.
காஷ்மீரின் புல்வாமாவில் குல்ஷண்புரா பகுதியில் வசித்து வந்த பயங்கரவாதி இந்த ஆண்டு செப்டம்பர் 25ந்தேதியில் இருந்து காணவில்லை. இந்நிலையில், அந்நபர் பாதுகாப்பு படையினர் முன் இன்று சரண் அடைந்துள்ளார். ஒரு ஏ.கே. ரக துப்பாக்கியையும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தேடுதல் வேட்டை நிறைவடைந்து உள்ளது என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
Related Tags :
Next Story