டெல்லியில் பெண்களிடம் தொடர் பாலியல் துன்புறுத்தல்; காவல் உதவி ஆய்வாளர் பணி நீக்கம்

டெல்லியில் பெண்களிடம் தொடர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள துவாரகா காவல் நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக தொடர் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் வந்தன. இதன் மீது பல எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன. எனினும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யாரென தெரியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்நிலையில், பல சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்ததில் காவல் உதவி ஆய்வாளர் கிரூவல் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் போக்குவரத்து பிரிவில் பணியில் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் மீது 4 தனி வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story