கார்டூன் சர்ச்சை: மும்பை சாலையில் ஒட்டப்பட்ட பிரான்ஸ் அதிபரின் போஸ்டர்கள் !


கார்டூன் சர்ச்சை: மும்பை சாலையில் ஒட்டப்பட்ட பிரான்ஸ் அதிபரின் போஸ்டர்கள் !
x
தினத்தந்தி 30 Oct 2020 8:34 PM IST (Updated: 30 Oct 2020 8:34 PM IST)
t-max-icont-min-icon

மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள முகம்மது அலி சாலையில், இமானுவேல் மேக்ரான் படங்கள் அடங்கிய போஸ்டர்கள் வரிசையாக ஒட்டப்பட்டிருந்தன.

மும்பை,

முகம்மது நபிகள் குறித்த  கார்டூன் விவகாரத்தால்  பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பாகிஸ்தான், துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகள் இமானுவேல் மேக்ரானை கடுமையாக சாடின. முஸ்லீம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளால் கடுமையாக இமானுவேல் மேக்ரான் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். 

இந்த நிலையில், மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள முகம்மது அலி  சாலையில், இமானுவேல் மேக்ரான் படங்கள்  அடங்கிய போஸ்டர்கள் வரிசையாக ஒட்டப்பட்டிருந்தன. சாலையில் ஒட்டப்பட்டிருந்த இமானுவேல் மேக்ரான் படங்கள் மீது வாகனங்கள்  செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. அதேபோல், இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக மக்கள் பேரணி சென்ற காட்சிகளும் பரவி வருகின்றன. 

 பெண்டி பசாரில் உள்ள மொகமது அலி சாலையில்  ஒட்டப்பட்டுள்ள இந்த புகைப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில்  வைரலானதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த புகைப்படங்களை உடனடியாக அகற்றினர். இருப்பினும் இது தொடர்பாக யார்  மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.  

Next Story