மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,993 பேருக்கு கொரோனா


மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,993 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Nov 2020 4:59 AM IST (Updated: 1 Nov 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,73,664 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 57 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மேற்குக் வங்கத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,841 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 36,886 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 3,29,937 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story