பஞ்சாப் மாநிலத்தில் இன்று 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


பஞ்சாப் மாநிலத்தில் இன்று 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 4 Nov 2020 11:34 PM IST (Updated: 4 Nov 2020 11:34 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப் மாநிலத்தில் இன்று 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,35,313 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாபில் இன்று 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,259 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 4,471 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,26,583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story