மத்திய பிரதேச இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்


மத்திய பிரதேச இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்
x
தினத்தந்தி 10 Nov 2020 10:24 AM IST (Updated: 10 Nov 2020 10:24 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேச இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே காலியாக இருந்த 3 இடங்களைச் சேர்த்து மொத்தம் 28 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீட்க காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். மத்திய பிரதேசத்தில் தற்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக உள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க. 9 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டியதுள்ளது. 

அதேபோல், 88 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கைவசம் வைத்துள்ள காங்கிரஸ் இழந்த ஆட்சியை மீண்டும் பெற போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் அல்லது குறைந்தது 21 தொகுதிகளில் வெற்றிபெற்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கலாம்.

இந்நிலையில், மத்திய பிரதேசம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 11 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதே நேரம் காங்கிரஸ் 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக தற்போதைய நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story