யாருடைய நிர்பந்தத்திற்கும் அடி பணிய மாட்டோம் : தேர்தல் ஆணையம் விளக்கம்
வெற்றி சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
புதுடெல்லி,
பீகார் சட்டமன்ற தேர்தலில் 119 இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில், அவர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி குற்றம் சாட்டியது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த தேர்தல் ஆணையம், யாருடைய நிர்பந்தத்திற்கும் அடி பணியமாட்டோம் என்று தெரிவித்தது. மேலும், முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பாக தபால் வாக்குகளை மீண்டும் சரிபார்த்து செல்லாத வாக்குகள் இருந்தால் அவை நிராகரிக்கப்பட்ட பிறகே முடிவுகள் அறிவிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
Related Tags :
Next Story