ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,732 பேருக்கு தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,47,977 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,828 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 20,915 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 8,20,234 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related Tags :
Next Story