மராட்டியத்தில் இன்று புதிதாக 4,907 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் புதிதாக 4 ஆயிரத்து 907 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதன்படி அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 907 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கு வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 31 ஆயிரத்து 833 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 15 லட்சத்து 97 ஆயிரத்து 255 பேர் குணமடைந்து உள்ளனர்.
அதில் இன்று மட்டும் 9 ஆயிரத்து 164 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 88 ஆயிரத்து 070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் மேலும் 125 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 45 ஆயிரத்து 560 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 92.23 சதவீதமாக அதிகரித்துள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story