மராட்டியத்தில் புதிதாக 4 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் புதிதாக 4 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 4 ஆயிரத்து 496 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 17 லட்சத்து 36 ஆயிரத்து 329 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் இன்று மட்டும் 7 ஆயிரத்து 809 பேர் குணமடைந்தனர். இதுவரை மாநிலம் முழுவதும் 16 லட்சத்து 05 ஆயிரத்து 064 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலத்தில் 84 ஆயிரத்து 627 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல மாநிலத்தில் புதிதாக 122 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 45 ஆயிரத்து 682 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 92.44 சதவீதமாக உள்ளது.
Related Tags :
Next Story