6 மாதங்களுக்கு பிறகு தொழில்துறை உற்பத்தி விகிதம், 0.2 சதவீதம் அதிகரிப்பு
6 மாதங்களுக்கு பிறகு தொழில்துறை உற்பத்தி விகிதம், 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த செப்டம்பர் மாதம், நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதம், 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. சுரங்கம், மின்துறை ஆகியவற்றில் அதிக உற்பத்தி காரணமாக, இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த பிப்ரவரி மாதம், தொழில்துறை உற்பத்தியில் 5.2 சதவீத வளர்ச்சி காணப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கு காரணமாக தொழில்துறை முடங்கியதால், தொடர்ந்து 6 மாதங்களாக உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டது. தற்போது, ஊரடங்கு தளர்வுகளால் தொழில்துறை செயல்பட தொடங்கி இருப்பதால், உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story