கேரளாவில் மேலும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் மேலும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்று புதிதாக 2,710 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, “ கேரளாவில் இன்று புதிதாக 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 5,27,709 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 1,888 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 6,567 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 4,54,774 ஆக உள்ளது. தற்போது 70,925 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாநிலத்தில் இன்று 25 ஆயிரத்து 141 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story