ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரதமர் மோடி


ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம்  அவசியம்: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 Nov 2020 5:35 PM IST (Updated: 17 Nov 2020 5:35 PM IST)
t-max-icont-min-icon

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

பிரிக்ஸ் நாடுகளின் 12-வது மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. ரஷியா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. 

காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும், சீனா சார்பில் அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கும், ரஷியா சார்பில் அதிபர் விளாடிமிர் புதினும் பங்கேற்றுள்ளனர். மெய்நிகர் முறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது: -

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை பொறுப்பாக்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினையை முறையான வழியில்  சீர் செய்ய வேண்டும். உலகில் தற்போது எதிர்கொள்ளும்  மிகப்பெரிய பிரச்சினை பயங்கரவாதம்தான். சர்வதேச அமைப்புகளின் திறன்கள் பற்றி கேள்வி எழுப்பப்படுகின்றன. இதற்கு முக்க்கிய காரணம் என்னவெனில், நடப்பு சூழலுக்கு ஏற்ப மாற்றம் கொண்டு வரப்படாததே ஆகும்.  இந்தியா பன்முகத்தன்மைக்கு உறுதியான ஆதரவளிக்கும் நாடாகும். 

ஐக்கிய நாடுகள் அவையின் 75-வது ஆண்டு தினம் தற்போது கடைபிடிக்கப்படுகிறது. பன்முகத்தன்மைக்கு ஆதரவளிக்கும் முதன்மையான நாடு இந்தியா ஆகும். இந்திய பாரம்பரியப் படி   ஒட்டு மொத்த உலகமும் ஒரு குடும்பமாக கருதப்படுகிறது” என்றார். 
1 More update

Next Story