இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கை 13 கோடியை கடந்தது


இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கை 13 கோடியை கடந்தது
x
தினத்தந்தி 21 Nov 2020 1:06 PM GMT (Updated: 21 Nov 2020 1:06 PM GMT)

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை எண்ணிக்கை மொத்தம் 13 கோடியை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரசுக்கான பரிசோதனையில் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.  இதன்படி, இந்தியாவில் கொரோனா வைரசுக்கான பரிசோதனை எண்ணிக்கை மொத்தம் 13 கோடியை கடந்துள்ளன.

இவற்றில் கடந்த 10 நாட்களில் ஒரு கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.  எனினும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்த விகிதத்துடன் சரிவடைந்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று வரையிலான கணக்கீடுகளின்படி, 13 கோடியே 6 லட்சத்து 57 ஆயிரத்து 808 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 22 பேருக்கு பரிசோதனைகள் நடந்துள்ளன என்று தெரிவித்து உள்ளது.  எனினும், கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது பற்றிய அறிவிப்பு ஆறுதலளிக்கும் வகையில் உள்ளது.

Next Story