டெல்லியில் புதிதாக 5,879- பேருக்கு கொரோனா தொற்று


டெல்லியில் புதிதாக 5,879- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 21 Nov 2020 5:38 PM GMT (Updated: 21 Nov 2020 5:38 PM GMT)

டெல்லியில் புதிதாக 5 ஆயிரத்து 879- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 879- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல், 111 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 117- ஆக உள்ளது. 

தொற்றில் இருந்து 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ள நிலையில்,  தொற்று பாதிப்புடன் 39,741 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 270- ஆக உள்ளது. 

Next Story