ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சிக் கவுன்சில் 2-ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது


ஜம்மு-காஷ்மீா் மாவட்ட வளா்ச்சிக் கவுன்சில் 2-ஆம் கட்ட தேர்தல்:  வாக்குப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 1 Dec 2020 2:48 AM GMT (Updated: 1 Dec 2020 2:48 AM GMT)

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளா்ச்சிக் கவுன்சிலின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளா்ச்சிக் கவுன்சிலின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு  தொடங்கியது. மொத்தம் 43 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதில் ஜம்முவில் 18 தொகுதிகளும், காஷ்மீரில் 25 தொகுதிகளும் உள்ளன. மொத்தம் 321 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அவா்களில் 125 பேர் ஜம்முவிலும், 196 பேர் காஷ்மீரிலும் போட்டியிடுகின்றனா்.

மாவட்ட வளா்ச்சிக் கவுன்சிலின் இரண்டாம் கட்ட  தேர்தலுடன் 83 தொகுதிகளில் கிராமத் தலைவா் தேர்தலும் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 223 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 2,142 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story