டிசம்பர் 4-ந் தேதி நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்பு
டிசம்பர் 4-ந் தேதி நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்க உள்ளது.
கொல்கத்தா,
நாட்டில் கொரோனா தொற்று பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், கொரோனா பரவல் சூழல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வருகிற 4-ந் தேதி மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு, பா.ஜனதாவுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வரும் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சுதீப் பண்டோபாத்யாய், கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் டெரக் ஓ பிரைன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிப்பார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story