காஷ்மீரில் இரண்டாம் கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 48.62 சதவீத வாக்குகள் பதிவு


காஷ்மீரில் இரண்டாம் கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 48.62 சதவீத வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 1 Dec 2020 11:14 PM GMT (Updated: 1 Dec 2020 11:14 PM GMT)

காஷ்மீரில் இரண்டாம் கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 48.62 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஸ்ரீநகர், 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கு 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அதிகளவில் வந்து மக்கள் வாக்களிக்க விழிப்புணர்வு செய்யப்பட்டது. கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கட்டமாக நடந்த தேர்தலில் 51.76 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று எந்த அசம்பாவிதமுமின்றி அமைதியாக நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 48.62 சதவீத வாக்குகள் பதிவானது.

Next Story