மராட்டியம், மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்


மராட்டியம், மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Dec 2020 8:37 PM GMT (Updated: 4 Dec 2020 8:37 PM GMT)

மராட்டியம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து மொத்தம் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

புனே,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் சிறப்பு அதிரடி படையினர் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருளை கைப்பற்றி உள்ளனர்.  இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதேபோன்று மராட்டியத்தின் மும்பை நகரில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ரூ.3 கோடி மதிப்பிலான ஹெராயின் என்ற போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.  இதுபற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வடமாநிலங்களில் அடுத்தடுத்து ஒரே நாளில் மொத்தம் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Next Story