காஷ்மீரில் கண்டறியப்பட்ட பயங்கரவாதிகளின் பதுங்கு குழி; வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல்


காஷ்மீரில் கண்டறியப்பட்ட பயங்கரவாதிகளின் பதுங்கு குழி; வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல்
x
தினத்தந்தி 6 Dec 2020 1:51 AM IST (Updated: 6 Dec 2020 1:51 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழியை கண்டறிந்து வெடிகுண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

பாராமுல்லா,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கு குழிகளை அமைத்திருப்பது பற்றி காஷ்மீர் போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து பாராமுல்லா நகர போலீசாருடன் கூட்டாக இணைந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் பதுங்கு குழிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், ஷிர்போரா மற்றும் நரிபால் ஆகிய பகுதிகளுக்கு இடையே பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.  அதில் இருந்து எறிகுண்டுகளை வீசும் துப்பாக்கிகள் இரண்டு, சீன ரக எறிகுண்டு ஒன்று, மருந்துகள் மற்றும் குற்றங்கள் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story