இமாசல பிரதேச தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு; மீட்பு பணி தொடர்கிறது
இமாசல பிரதேசத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காயமடைந்த ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
சோலன்,
இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் பட்டி என்ற தொழிற்சாலை பகுதியில் அமைந்த தொழிற்சாலை ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதுதவிர்த்து நடந்த மீட்பு பணியில் 3 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன என மாநில அவசரகால செயல் மையம் தெரிவித்து உள்ளது. தீ விபத்து ஏற்பட்டது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story