மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: மேலும் 4,026 பேருக்கு தொற்று உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 Dec 2020 11:03 PM IST (Updated: 8 Dec 2020 11:03 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இன்று மேலும் 4,026 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் புதிதாக 4 ஆயிரத்து 026 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 18 லட்சத்து 59 ஆயிரத்து 367 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 6 ஆயிரத்து 365 பேர் குணமடைந்தனர். இதுவரை மாநிலம் முழுவதும் 17 லட்சத்து 37 ஆயிரத்து 080 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலத்தில் 73 ஆயிரத்து 374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் புதிதாக 53 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 47 ஆயிரத்து 827 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story