மராட்டியத்தில் இன்று புதிதாக 3,717 பேருக்கு கொரோனா பாதிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Dec 2020 9:23 PM IST (Updated: 13 Dec 2020 9:23 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இன்று புதிதாக 3,717 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் புதிதாக 3,717 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 80 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 70 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 48,209 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் தொற்று பாதிப்பில் இருந்து 3,083 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17 லட்சத்து 57 ஆயிரத்து 005 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 74 ஆயிரத்து  104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 93.44 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.56 சதவிகிதமாக உள்ளது.

Next Story