கூலிப்படை மூலம் மம்தாவை கொல்ல பா.ஜனதா சதி: திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு


கூலிப்படை மூலம் மம்தாவை கொல்ல பா.ஜனதா சதி: திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Dec 2020 12:19 AM IST (Updated: 14 Dec 2020 12:19 AM IST)
t-max-icont-min-icon

கூலிப்படை மூலம் மம்தாவை கொல்ல பா.ஜனதா சதி திட்டம் தீட்டக்கூடும் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாங்கரில் நேற்று ஒரு சாலை திறப்பு விழா நடைபெற்றது. அதில், அம்மாநில பஞ்சாயத்து மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான சுப்ரதா முகர்ஜி கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது:-

மம்தா பானர்ஜி அரசை சட்டசபை தேர்தலில் தோற்கடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. ஒருவேளை தோற்கடிக்க முடியாவிட்டால், மம்தா பானர்ஜியை கொலை செய்ய பா.ஜனதா சதித்திட்டம் தீட்டக்கூடும்.

கூலிப்படை மூலம் இதை செய்து விட்டு மற்றவர்கள் மீது பழி போடக்கூடும். கோடிக்கணக்கான மக்களுக்கு தாய் போல் இருக்கும் மம்தா பானர்ஜிக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்க முயன்றால், அதை தடுக்க நாங்கள் ரத்தம் சிந்தத்தயார்.

பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா வாகன அணிவகுப்பு மீது கல் வீச பா.ஜனதாவே ஆட்களை ஏற்பாடு செய்ததாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆனால், மம்தாவுக்கு அவரது கட்சியினரால்தான் அச்சுறுத்தல் என்று பா.ஜனதா எம்.பி. அருண்சிங் பதிலடி கொடுத்துள்ளார்.


Next Story