குஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி;கட்ச் மாவட்டத்தில் நாளை சிறப்பு விழா
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாளை குஜராத்துக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி கட்ச் மாவட்டத்தின் மாந்த்வி நகரில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்துக்காக உப்புநீக்கும் ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் வகையில் இந்த ஆலை அமைக்கப்படுகிறது. நாட்டில் நிலையான மற்றும் மலிவு நீர்வள அறுவடைக்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.
அதேபோல் கட்ச் நகரின் வைகாக்கோட் கிராமத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைப்பதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது 30 ஜிகாவாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க வழி வகுக்கும்.
அதனைத் தொடர்ந்து சர்ஹாத் அஞ்சரில் முழுமையான தானியங்கி பால் பதப்படுத்துதல் அலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.120 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த ஆலை ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்டதாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story