டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்களின் வேலை நிறுத்த  போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 15 Dec 2020 7:06 PM GMT (Updated: 15 Dec 2020 7:06 PM GMT)

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் சம்பள பிரச்சனை உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 6-வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் உள்பட பல கோரிக்கையுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். 

செவிலியர்களின் வேலைநிறுத்தத்தால் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள் மற்றும் புற நோயாளிகள் சிரமம்  அடைந்தனர். இதற்கு மத்தியில் செவிலியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி ஐகோர்ட்டும், செவிலியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தியது.  

இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்துடன் செவிலியர்கள் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக செவிலியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

செவிலியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பற்றி கருத்து கூறிய எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியே, செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தப்படும். முடிந்த அளவு விரைவாக அவர்களின் பிரச்சினை தீர்க்க முயற்சிக்கப்படும். எங்களின் கோரிக்கைக்கு செவி கொடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்ற செவிலியர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார். 

Next Story