ஹத்ராஸ் வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சிபிஐ


கோப்பு படம் (பிடிஐ)
x
கோப்பு படம் (பிடிஐ)
தினத்தந்தி 18 Dec 2020 11:36 AM GMT (Updated: 2020-12-18T17:06:07+05:30)

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஹத்ராஸ் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பட்டியல் இன இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

உயிரிழந்த பெண்ணின் உடலை நள்ளிரவில் குடும்பத்தினரை அனுமதிக்காமல் தகனம் செய்தது,  முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தெரியாத நபர்கள் என வழக்குப்பதிவு செய்தது என உ.பி. போலீசார் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

இதையடுத்து, இந்த வழக்கை அலகாபாத் ஐகோர்ட் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட சந்தீப், லவ்குஷ், ரவி, ராமு ஆகிய நான்கு பேர் மீதும், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ததாக சிபிஐ குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

Next Story