டெல்லி மாநகராட்சிகளில் ரூ.2,500 கோடி ஊழல்; கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு


டெல்லி மாநகராட்சிகளில் ரூ.2,500 கோடி ஊழல்; கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Dec 2020 9:42 PM IST (Updated: 18 Dec 2020 9:45 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பா.ஜனதா அதிகாரத்தில் இருக்கும் மாநகராட்சிகளில் ரூ.2,500 கோடி அளவுக்கு மோசடி நடந்து உள்ளது என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி, 

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு, அங்குள்ள மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடி நிலுவை தொகையை வழங்க கோரி 3 மாநகராட்சிகளின் மேயர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:–

டெல்லியில் பா.ஜனதா அதிகாரத்தில் இருக்கும் மாநகராட்சிகளில் ரூ.2,500 கோடி அளவுக்கு மோசடி நடந்து உள்ளது. இது காமன்வெல்த் ஊழலை விட மிகப்பெரிய ஊழல். 

இதுபற்றி விவாதிப்பது வேதனையானது. அந்த பணத்தில் மாநகராட்சி ஊழியர்கள், டாக்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்திருக்க முடியும். தெருவில் வசிக்கும் மக்கள கூட டெல்லி மாநகராட்சியில் ஊழல் நடப்பதாக கூறுகிறார்கள். அதே மக்கள் டெல்லி அரசு நேர்மையானது என்கிறார்கள்இவ்வாறு அவர் கூறினார்


Next Story