மேற்கு வங்காளத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்


மேற்கு வங்காளத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 19 Dec 2020 4:18 AM IST (Updated: 19 Dec 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி, 

மேற்கு வங்காள சட்டசபைக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதவாக்கில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் இருந்து 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்பும் விவகாரத்தில் அம்மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு முற்றியுள்ளது. இந்த சூழ்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு மேற்கு வங்காளம் சென்றார்.

அங்கு அமித்ஷா இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கட்சி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். அப்போது ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய அக்கட்சி தலைவர்கள் அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய, மாநில அரசு மோதல் போக்கு மற்றும் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில், அமித்ஷாவின் மேற்கு வங்காள சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story