‘திட்டமிடாத ஊரடங்கு லட்சக்கணக்கானோரின் வாழ்வை அழித்துவிட்டது’ - ராகுல் குற்றச்சாட்டு


‘திட்டமிடாத ஊரடங்கு லட்சக்கணக்கானோரின் வாழ்வை அழித்துவிட்டது’ - ராகுல் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Dec 2020 1:46 AM IST (Updated: 20 Dec 2020 1:46 AM IST)
t-max-icont-min-icon

திட்டமிடாத ஊரடங்கு கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியைத் தரவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த மார்ச் மாதம் பேசிய பிரதமர் மோடி, ‘மகாபாரதப் போரில் 18 நாட்களில் வெற்றி கிட்டியது. அதைப்போல ஊரடங்கால் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் 21 நாட்களில் வெற்றி பெறுவோம்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று ஒரு கோடியைத் தாண்டியது.

அதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘சுமார் ஒன்றரை லட்சம் மரணங்களுடன் ஒரு கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு. பிரதமர் கூறியதுபோல, திட்டமிடாத ஊரடங்கு கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றியைத் தரவில்லை. மாறாக, அது லட்சக்கணக்கானோரின் வாழ்வை அழித்துவிட்டது’ என்று கூறியுள்ளார்.

Next Story