போராட்ட களத்தில் பலியான விவசாயிகளுக்கு ராகுல்காந்தி அஞ்சலி


போராட்ட களத்தில் பலியான விவசாயிகளுக்கு ராகுல்காந்தி அஞ்சலி
x
தினத்தந்தி 20 Dec 2020 9:28 PM GMT (Updated: 2020-12-21T02:58:19+05:30)

போராட்ட களத்தில் பலியான விவசாயிகளுக்கு ராகுல்காந்தி அஞ்சலி தெரிவித்தார்.

புதுடெல்லி, 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராடி வருகிறார்கள். அங்கு கடும் குளிர் காரணமாக, விவசாயிகள் சிலர் இறந்து விட்டனர். அவர்களின் புகைப்படங்கள், பெயர் அடங்கிய சுவரொட்டியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “விவசாயிகள் போராட்டமும், தியாகமும் நல்ல விளைவுகளை உருவாக்கும். வீண் போகாது. பலியான விவசாய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கமும், அஞ்சலியும் செலுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Next Story