கொரோனா ஊரடங்கில் அதிகம் உதவிய எம்.பி.க்கள் பட்டியல்; ஆய்வில் தகவல்


கொரோனா ஊரடங்கில் அதிகம் உதவிய எம்.பி.க்கள் பட்டியல்; ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 23 Dec 2020 1:55 PM GMT (Updated: 23 Dec 2020 1:55 PM GMT)

கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்தின்போது மக்களுக்கு அதிகம் உதவிய மக்களவை எம்.பி.க்களைக் கண்டறியும் சர்வே நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது.

புதுடெல்லி

புதுடெல்லியைத் தளமாகக் கொண்டு பொதுமக்களின் நலன் சார்ந்து செயல்படும் கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் நிறுவனம், வருங்காலத்தில் ஒரு தொற்று நோய் போன்ற எதிர்பாராத நெருக்கடியில் பொதுமுடக்கம் தேவைப்பட்டால நாம் எப்படி அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்தியது.  அதற்காக கொரோனா ஊரடங்கின்  போது மக்களுக்கு அதிகம் உதவிய  எம்.பி.க்களைக் கண்டுபிடிக்க 2020 அக்டோபர் 1ம் தேதி ஒரு சர்வேவைத் தொடங்கியது. அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. முடிவுகளை கவர்ன் ஐ தனது www.governeye.co.in/survey/result வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 1, 2020 மற்றும் அக்டோபர் 15, 2020க்கு இடையில் 512 மக்களவை எம்.பி.க்களுக்காக மொத்தம் 33,82,560 பரிந்துரைகள் பெறப்பட்டன. பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் சிறந்த 25 எம்.பி.க்கள் கள நேர்காணல் நிலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள் (மக்களவை இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளவை) அகர வரிசைப்படி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

1. மவுலானா பத்ருதீன் அஜ்மல் – துப்ரி, அசாம் (அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி),

2. சுக்பீர் சிங் பாதல் – பெரோஸ்பூர், பஞ்சாப் (எஸ்ஏடி),

3. ஓம் பிர்லா – கோட்டா, ராஜஸ்தான் (பாஜக),

4. வினோத் சவ்தா – கச், குஜராத் (பாஜக)

5.கார்த்தி சிதம்பரம் – சிவகங்கை தமிழ்நாடு (காங்கிரஸ்)

6. டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் – சென்னை தெற்கு, தமிழ்நாடு (திமுக),

7. அனில் பிரோஜியா – உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம் (பாஜக),

8. நிதின் ஜெய்ராம் கட்கரி – நாக்பூர், மகாராஷ்டிரா (பாஜக),

9. ராகுல் காந்தி – வயநாடு, கேரளா (காங்கிரஸ்),

10. ஹேமந்த் துக்காரம் கோட்சே – நாசிக், மராட்டியம் (சிவசேனா),

11. விஜய் குமார் ஹன்ஸ்டாக் – ராஜ்மஹால், ஜார்க்கண்ட் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா),

12.சவுத்ரி மெஹபூப் அலி கைசர் – ககாரியா, பீகார் (லோக் ஜன சக்தி)

13. அப்துல் காலிக் – பார்பேடா, அஸ்ஸாம் (காங்கிரஸ்)

14. விஜய் குமார் – கயா, பீகார் ( ஐக்கிய ஜனதா தளம்),

15. மோகன்பாய் கல்யாண்ஜி குண்டாரியா – ராஜ்கோட், குஜராத் (பாஜக)

16. சங்கர் லால்வாணி – இந்தூர், மத்தியப் பிரதேசம் ( பாஜக)

17. சதாசிவ கிசன் லோகண்டே – ஷீரடி, மகாராஷ்டிரா (சிவசேனா)

18. மஹுவா மொய்த்ரா – கிருஷ்ணாநகர், மேற்கு வங்கம் (திரிணாமூல் காங்கிரஸ்),

19. மாலூக் நாகர் – பிஜ்னோர், உத்தரபிரதேசம் (பகுஜன் சமாஜ் கட்சி),

20. ரவி சங்கர் பிரசாத் – பாட்னா சாஹிப், பீகார் (பாஜக)

21. அதலா பிரபாகர ரெட்டி – நெல்லூர், ஆந்திரப் பிரதேசம் (ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி),

22. சையத் இம்தியாஸ் ஜலீல் – அவுரங்காபாத், மராட்டியம் (அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமீன்)

23. எல்.எஸ். தேஜஸ்வி – பெங்களூரு தெற்கு, கர்நாடகா (பாஜக),

24. டாக்டர் சஷி தரூர் – திருவனந்தபுரம், கேரளா (காங்கிரஸ்),

25. அகிலேஷ் யாதவ் – அசாம்கர், உத்தரபிரதேசம் (சமாஜ்வாடி கட்சி)

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 25 எம்.பி.க்களின் தொகுதிகளில் கள நேர்காணல்கள் செய்த பிறகு, முதல் 10 எம்.பி.க்களின் பட்டியலில் 77 புள்ளிகளுடன் அனில் பிரோஜியா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரை அடுத்து, அதலா பிரபாகர ரெட்டி (74 புள்ளிகள்) இரண்டாவது இடத்தையும் ராகுல் காந்தி (70 புள்ளிகள்)  மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

மஹுவா மொய்த்ரா( 68 புள்ளிகள்)  4 வது இடத்தையும் எல்.எஸ்.தேஜஸ்வி சூர்யா ( 67 புள்ளிகள்)  5வது இடத்தையும் ஹேமந்த் துக்காரம் கோட்சே ( 66 புள்ளிகள்)  6வது இடத்தையும் சுக்பீர் சிங் பாதல் ( 65 புள்ளிகள்) 7வது இடத்தையும் சங்கர் லால்வானி (64 புள்ளிகள்)  8 வது இடத்தையும் பிடித்துள்ளனர். தமிழகத்தில் திமுகவைச் சேர்ந்த சென்னை தெற்கு தொகுதி எம்.பி டாக்டர்  தமிழச்சி தங்கபாண்டியன் ( 63 புள்ளிகள்) 9வது இடத்தைப் பிடித்துள்ளார். நிதின் ஜெய்ராம் கட்கரி( 61 புள்ளிகள்) 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த சர்வே பற்றியும் தரவரிசை மற்றும் சர்வேமுறை பற்றியும் கூடுதல் விவரங்களை கவர்ன் ஐ இணையதளத்தில் காணலாம்.எதிர்காலத்தில் இதுபோன்ற நெருக்கடிக்கு சிறந்த முறையில் தயாராக இருக்க ஒரு தேசமாக நாம் என்ன செய்ய முடியும் என்பதையும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்வோம் என்று நம்புகிறோம் என அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story