கேரளாவில் இன்று மேலும் 5,177 பேருக்கு கொரோனா பாதிப்பு: 4,801 பேர் குணமடைந்தனர்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Dec 2020 11:46 PM IST (Updated: 24 Dec 2020 11:46 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இன்று மேலும் 5,177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி, கேரளாவில் மேலும் 5,177 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,26,688 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று மேலும் 4,801 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை மொத்தமாக 6,60,445 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால்  இன்று மேலும் 22 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 2,914 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மாநிலத்தில் 63,155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 More update

Next Story