உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்


உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 22 Jan 2021 8:43 AM GMT (Updated: 2021-01-22T14:13:01+05:30)

உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. 

இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை கடந்த 16 ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை அதே தேதியில் தொடங்கி வைத்தனர்.  முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா? என்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் பிரதமர் மோடி கேட்டு அறிந்தார். உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு புதிய நம்பிக்கைகளுடன் தொடங்கியுள்ளது. 

தடுப்பூசி இந்தியாவில் ஒவ்வொரு மூலையிலும் சென்று கொண்டிருக்கிறது. உலக நாடுகளுக்கும் இந்தியா தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Next Story