வினாத்தாள் வெளியானதால் கர்நாடகாவில் அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு


வினாத்தாள் வெளியானதால் கர்நாடகாவில் அரசுப் பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 24 Jan 2021 6:36 PM GMT (Updated: 2021-01-25T00:06:54+05:30)

கர்நாடகத்தில் அரசுப் பணியாளர் தேர்வுக்கான வினாத் தாள் வெளியானதால் அந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் அரசுப் பணியாளர் தேர்வுக்கான வினாத் தாள் வெளியானதால் அந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் இதுவரை 14 பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடகத்தில் முதல் பிரிவு உதவியாளருக்கான அரசுப் பணியாளர் தேர்வு இன்று (ஜன. 24) நடைபெற இருந்தது. எனினும் தேர்வுக்கான வினாத்தாள் ஏற்கெனவே வெளியான தகவலை அறிந்து தேர்வுகளை அரசு பணியாளர் தேர்வாணையம் ஒத்திவைத்துள்ளது. 

இதுதொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வினாத்தாள்களையும் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 1,192- பணியிடங்களுக்கு கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story