மூட நம்பிக்கையில் பயங்கரம்:பெற்ற மகள்களை அடித்து கொலைசெய்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்


Image courtesy : thenewsminute.com
x
Image courtesy : thenewsminute.com
தினத்தந்தி 25 Jan 2021 7:52 AM GMT (Updated: 2021-01-25T17:12:24+05:30)

ஆந்திராவில் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகத்தில் கொண்ட அதீத ஈடுபட்டால், மூடநம்பிக்கையில் இதுபோன்று கொடூர செயலில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சித்தூர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதிகள்  புருஷோத்தம்  நாயுடு  இவரது மனை வி பத்மஜா .   புருஷோத்தம்   அரசு  கல்லூரியில் வேதியியல் இணை பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். எம்.எஸ்.சி கணிதத்தில் தங்கப்பதக்கம் வென்ற மனைவி பத்மஜா தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இவர்களது மகள்கள் அலெக்யா (27), சாய் திவ்யா (22) . அலெக்யா இந்திய வன முகாமைத்துவ நிறுவனத்தின் மாணவர், திவ்யா பிபிஏ பட்டதாரி ஆவார்.

ஊரடங்கால் வீட்டில் இருந்த இவர்கள், கடந்த சில மாதங்களாக வீட்டில் இவர்கள்  பூஜைகள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை தனது இரண்டு மகள்களை உடற்பயிற்சி செய்யும் இரும்பு டம்பிள்ஸ் மூலம் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

 அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், ஆன்மீகத்தில் கொண்ட அதீத ஈடுபட்டால், மூடநம்பிக்கையில் இதுபோன்று கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தம்பதியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

எவ்வாறாயினும், சம்பவத்திற்கான் காரணத்தை  போலீசாரால் தீர்மானிக்க முடியவில்லை.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது  என்பது பற்றிய முழு விவரங்களும் எங்களுக்குத் தெரியாது, ஆனால் நாங்கள் அங்கு சென்றதும் தம்பதிகள் சாதாரணமாக காணப்படவில்லை.  இறந்தவர்கள் எழுந்திருப்பார்கள் என்று கூறி, அவர்களுக்கு ஒரு நாள் நேரம் கொடுக்குமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டனர். 

அவர்களுடன் உரையாடிய பிறகு, அவர்கள் ஒரு மிரண்ட நிலையில் இருப்பதாக எங்களுக்குத் தோன்றியது இதனால் அவர்களை விசாரிக்க நாட்ளாகும் என கூறினர்.

Next Story