புதுச்சேரி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தார், நமச்சிவாயம்


புதுச்சேரி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தார், நமச்சிவாயம்
x
தினத்தந்தி 25 Jan 2021 8:10 AM GMT (Updated: 2021-01-25T13:40:06+05:30)

புதுச்சேரி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவிகளை நமச்சிவாயம் ராஜினாமா செய்தார்.

புதுச்சேரி, 

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். கட்சிக்கு துரோகம் இழைத்ததால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம், தனது வில்லியனுர் தொகுதி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வதாக புதுச்சேரி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளார். நமச்சிவாயத்திற்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்எல்ஏவும் தீப்பாஞ்சானும் ராஜினாமா செய்தார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story