கொரோனா காலகட்டத்தில், பாதுகாப்பான தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் உறுதி பூண்டுள்ளது - தலைமை தேர்தல் கமிஷனர்


கொரோனா காலகட்டத்தில், பாதுகாப்பான தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் உறுதி பூண்டுள்ளது - தலைமை தேர்தல் கமிஷனர்
x
தினத்தந்தி 25 Jan 2021 9:25 PM GMT (Updated: 25 Jan 2021 9:25 PM GMT)

கொரோனா காலகட்டத்தில், பாதுகாப்பான தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் உறுதி பூண்டுள்ளது என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தேசிய வாக்காளர் தினம் நேற்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் தேர்தல் கமிஷனர் பேசியதாவது:-

மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் 4 நாட்கள் தங்கி இருந்து ஆய்வு செய்தோம். அதைத்தொடர்ந்து, குடியரசு தினத்துக்கு பிறகு, சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் குழுக்கள் விரைவில் செல்ல உள்ளன.

கொரோனா காலகட்டத்தில், பாதுகாப்பான தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் உறுதி பூண்டுள்ளது. தேர்தல் கமிஷனின் இடைவிடாத முயற்சிகளால், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும், கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் தபால் ஓட்டு வசதி கிடைப்பது சாத்தியம் ஆனது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story