கொரோனா தடுப்பு மருந்து வந்தபோதும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
கொரோனா தடுப்பு மருந்து வந்தபோதும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மிகப்பெரிய போராட்டத்துக்கு பிறகு கொரோனா பரவலை கட்டுப்படுத்தி முன்கள பணியாளர்கள் சாதித்து உள்ளனர். ஆனால் தொற்று அபாயம் இன்னும் உள்ளது. உலகிலேயே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தாராவியில் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை உலகமே பாராட்டியது.
கொரோனா தடுப்பு மருந்து வந்துள்ள போதும், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சினையையும் எதிர்கொண்டு அதில் இருந்து மீண்டு வரும் திறன் மராட்டியத்துக்கு உள்ளது.
பிரச்சினையை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும், தைரியமும் எல்லோரிடமும் உள்ளது. நேரத்துக்கு நேரம் நான் கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டே இருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊடகங்கள் ஒத்துழைப்பு
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசுகையில், "மராட்டிய மாநிலம் லாத்தூர் பகுதி பூகம்பம் உள்ளிட்ட பல இயற்கை பேரிடர்களை சந்தித்து இருக்கிறது.
ஆனால் கொரோனா பிரச்சினை போல ஒரு பேரிடர் இதற்கு முன் நடந்தது கிடையாது. ஊடகங்கள் கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் அதிகம் ஒத்துழைப்பு வழங்கின" என்றார்.
Related Tags :
Next Story