2021-22ம் ஆண்டு பட்ஜெட்டுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்
2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.
இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இதில், நாடாளுமன்றத்தில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
Related Tags :
Next Story