இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றி நமது வலிமையை காட்டுகிறது: மத்திய நிதி மந்திரி
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த வெற்றி, நமது வலிமையை காட்டுகிறது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.
பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று காலை நடந்தது. இதில், நாடாளுமன்றத்தில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார்.
அவர் பேசும்பொழுது, இதுவரை இல்லாத வகையில், ஒரு நாட்டை அல்லது நாட்டின் ஒரு பகுதியை பேரிடர் தாக்கிய காலத்தில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாராகி உள்ளது. ஆனால், கொரோனா பாதிப்புகளில் இருந்து நாம் உறுதியுடன் போராடி மீண்டு வந்துள்ளோம் என்று மத்திய நிதி மந்திரி கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசும்பொழுது, கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்தியா நம்பிக்கை நாடாக திகழ்கிறது.
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த வெற்றி, நமது வலிமையை காட்டுகிறது. உலக நாடுகளால் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது என அவர் பேசினார்.
* மூன்று ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
* பொதுமக்களுக்கு 27.1 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
* பெரும் தொற்று ஏற்படும் என நாம் கற்பனை செய்து பார்க்கவில்லை.
* கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி என அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story