கொரோனா தொற்று; நாட்டில் உயிரிழப்பு, பாதிப்பு விகிதம் குறைவு: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிப்பு விகிதங்கள் குறைவு என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.
பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று காலை நடந்தது. இதில், நாடாளுமன்றத்தில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார்.
அவர் பேசும்பொழுது, கடந்த மே 2020ம் ஆண்டு ஆத்ம நிர்பார் தொகுப்பு திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்பின், பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கையாக கூடுதலாக 2 ஆத்ம நிர்பார் தொகுப்பு திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியானது.
பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா, 3 ஆத்ம நிர்பார் தொகுப்பு திட்டங்கள் மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் 5 மினி பட்ஜெட்டுகளாக அமைந்தன.
ஏழைகளிலும் வறியவர்கள் பலன் அடைவதற்கான வளங்களை அரசு அவர்களுக்கு கொண்டு சேர்த்தது.
இந்தியாவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு விகிதங்கள் குறைவு.
நாட்டில் உயிரிழப்பு விகிதம் 10 லட்சம் பேரில் 112 பேராக உள்ளது.
இதேபோன்று, பாதிப்பு விகிதங்கள் 10 லட்சம் பேரில் 130 பேராக உள்ளது.
இதுவே இன்று நாம் காணும் பொருளாதார மீட்சிக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளது என்று அவர் பேசியுள்ளார்.
Related Tags :
Next Story