2021-22 பட்ஜெட்: இது மக்கள் விரோத பட்ஜெட் -மம்தா பானர்ஜி தாக்கு


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 1 Feb 2021 6:51 PM IST (Updated: 1 Feb 2021 6:51 PM IST)
t-max-icont-min-icon

2021-22 பட்ஜெட்: குறித்து இது மக்கள் விரோத பட்ஜெட் என மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

புதுடெல்லி

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

இது மக்கள் விரோத பட்ஜெட். இந்தியாவின் முதல் காகிதமற்ற பட்ஜெட் கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையையும் விற்று உள்ளது.
பட்ஜெட்டில் அமைப்புசாரா துறைக்கு எதுவும் இல்லை என கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓபிரையன் கூறும்போது எந்த வித தொலைநோக்குப் பார்வையுமற்றது என்றும் அதன் முக்கியக் கரு ‘இந்தியாவை விற்று விடுவோம்’என்பதே என்று சாடியுள்ளார்.

அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், “இந்தப் பட்ஜெட்டின் கரு இந்தியாவை விற்போம் என்பதே, ரெயில்வே விற்கப்பட்டது, விமானநிலையங்கள் விற்கப்பட்டது, துறைமுகம் விற்கப்பட்டது. காப்பீடு-விற்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள்-23 விற்கப்பட்டது. சாமானிய மக்கள் புறக்கணிக்கப்பட்டனர், விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர். பணக்காரர் மேலும் பணக்காரர் ஆவார்கள், நடுத்தர வர்க்கத்துக்கு எதுவும் இல்லை, ஏழைகள் மேலும் ஏழைகளாவார்கள் என கூறி உள்ளார்.


Next Story