எரிபொருள் விலை உயர்வை கண்டித்து அசாமில் காங்கிரஸ் போராட்டம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து அசாமில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுகாத்தி,
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து அசாமில் காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் முன்பாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிலிண்டர் விலை உயர்வு, வெங்காய விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக், மக்களவை காங்கிரஸ் கட்சியின் குழு துணை தலைவர் கவுரவ் கோகாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கவுரவ் கோகாய், “ எரிபொருள் விலையை உயர்த்தி மக்களிடம் கொடூரமாக மத்திய அரசு கொள்ளையடிக்கிறது” என்றார்.
அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி நாளை வருகை தர உள்ள நிலையில், இந்த போராட்டமானது நடைபெற்றுள்ளது. அசாமில் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
Related Tags :
Next Story