கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார், குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Feb 2021 3:22 AM IST (Updated: 22 Feb 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானிக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், அவருக்கு தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது.

ஆமதாபாத், 

வதோதரா உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி கடந்த 14-ந் தேதி வதோதராவில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அவர் மேடையில் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 15-ந் தேதி, அவருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர் ஆமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று வெளியானது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே அவர் கொரோனாவின் பிடியில் இருந்து குணம் அடைந்திருப்பது உறுதியாகி உள்ளது.

1 More update

Next Story