மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 8,293 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மும்பை,
மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது.
அதன்படி, மராட்டியத்தில் இன்று புதிதாக 8,293 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 55 ஆயிரத்து 070 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,753டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 24 ஆயிரத்து 704 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 62 பேர் உயிரிழந்தநிலையில், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 52,154 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 77,008 ஆக உள்ளது.
Related Tags :
Next Story