” நிச்சயமாக அது தவறானது” : நெருக்கடி நிலை குறித்து ராகுல் காந்தி கருத்து


” நிச்சயமாக அது தவறானது” :  நெருக்கடி நிலை  குறித்து ராகுல் காந்தி கருத்து
x
தினத்தந்தி 2 March 2021 11:27 PM IST (Updated: 2 March 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

பேராசிரியர் கௌசிக் பாசுவுடன் ராகுல் காந்தி காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடினார்.

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகரும்  அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கௌசிக் பாசுவுடன் ராகுல் காந்தி காணொலி வாயிலாக இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், “ முன்னாள் பிரதமரும் தனது பாட்டியுமான இந்திரா காந்தி,  நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தியது முற்றிலும் தவறானது” எனக்கூறியுள்ளார். 

நெருக்கடி நிலை குறித்து உங்கள் பார்வை என்ன என்று பேராசிரியர் கெளசிக் ராகுல் காந்தியிடம் கேட்டார். அப்போது அவர் கூறுகையில், “  நெருக்கடி நிலை முற்றிலும் தவறானது நான் நினைக்கிறேன்” என்றார். 

மேலும் ராகுல் காந்தி கூறுகையில், “ காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஜனநாயக அமைப்புகளைக் கைப்பற்ற முயற்சித்ததில்லை. நேர்மையாக சொல்வது எனில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த திறனும் கிடையாது. எங்களுடைய அமைப்பு அதை அனுமதிக்கவும் செய்யாது. 

ஆர்எஸ்எஸ் அடிப்படையிலேயே வித்தியாசப்படுகிறது. அரசு அமைப்புகளில் அவர்களது ஆட்களை ஆர்எஸ்எஸ் நிரப்புகிறது. பாஜகவைத் தேர்தலில் தோற்கடித்தாலும் அரசு அமைப்பு முறையிலிருந்து அவர்களை எங்களால் வெளியேற்ற முடியாது” என்றார். 

Next Story